கோயம்புத்தூரில் இயங்கி வரும்
SUN STAFFING SOLUTIONS , அதன் உரிமையாளர் கிருத்திகா மற்றும் நாகராஜ் ராஜபாளையத்தில் இயங்கி வரும் வெற்றி அறக்கட்டளையை தொடர்பு கொண்டு தங்கள் உறுப்பினர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்.மேலும் எனது கணவர் பல நபர்களுக்கு அரசு வேலை வாங்கித் தந்ததாகவும் கணவரின் சகோதரர் இன்கம் டேக்ஸ் அதிகாரியாக உள்ளார் என்றும் கூறினார்.அரசு வேலை கிடைப்பதற்கு முன்பனமாக தாங்கள் பணம் தர வேண்டும் என்றும் அரசு அலுவலகத்தில் வைத்துதான் அரசு அதிகாரி ராம் பிரசாத் அவர்களால் இன்டர்வியூ நடத்தப்படும் என்றும் கூறினார்.
தங்களுக்கு பத்து நாட்களில் வேலை வாங்கி தருவதாகவும் தரவில்லை என்றால் தங்கள் பணத்திணையும் தாங்கள் இண்டர்வியூக்கு வரும் அனைத்து செலவுகளையும் சேர்த்து நாங்கள் தருகிறோம் என்று கூறினார்.
இதனை நம்பி வெற்றி அறக்கட்டளை உறுப்பினர்களான நாகராஜ், ஃபைசல், சிலம்பரசன், மணிகண்டன், சரத்
ஆகிய நாங்கள் அனைவரும் கிருத்திகா அவர்களின் கணவர் நாகராஜ், அவர்களின் அக்கவுண்டில் ஆறு லட்சத்து 25 ஆயிரம் ( Rs. 6,25,000 ) பணத்தினை செலுத்தினோம்.
அதன் பின் எங்கள் அனைவரையும் சென்னை வரவழைத்து ராம்பிரசாத்
அரசு அதிகாரி அவர்கள் சென்னை நந்தனம் பேராசிரியர் அன்பழகன் மாளிகையில் வைத்து நேர்காணல் நடத்தினார்.
தங்கள் அனைவருக்கும் 10 நாட்களில் உங்கள் பகுதி வருவாய்த் துறையில் OA Job வந்து விடும் என்று கூறினார் .
மேலும் சரத் என்ற எங்கள் உறுப்பினருக்கு Income tax inspector வேலை வழங்குவதாகவும் ஒரு மாதங்கள் தொடர்ந்து P. நாகராஜ் அவர்களின் சகோதரர் ( Income Tax Officer ) மாலை ஒரு மணி நேரம் ஆன்லைன் கிளாஸ் நடத்தினார்.
Income Tax இல் நான் உயர் அதிகாரிகளாக இருக்கிறேன் என்று கூறி Income Tax Website மூலம் பணத்தை பறித்துள்ளார்.
P. நாகராஜ் அவர்கள் கூறிய நாட்கள் கடந்த பின் எங்களுக்கு சந்தேகம் வந்தது அதனால் எங்களுடைய பணத்தை திரும்ப தாருங்கள் அல்லது அரசு வேலையை பெற்றுத் தாருங்கள் என்று கேட்டோம் . இன்று , நாளை என்று எங்களை கோயம்புத்தூர் மற்றும் சென்னை வரவழைத்து அலைக்கழித்தனர் பணத்தினை கேட்டால் உங்களைக் கொன்று புதைத்து விடுவோம் என்றும் தரை குறைவாக பேசினர்
மேலும் இன்று வரை எங்களுக்குரிய பணத்தை தரவில்லை அதனால் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளோம்.
இவர்கள் கூறிய வார்த்தையை நம்பி நாங்கள் பணத்தினை கஷ்டப்பட்டு சேகரித்து இவர்கள் அக்கவுண்டில் செலுத்தினோம் அதை இன்று வரை திரும்ப தராததால் எங்களுக்கு மன உளைச்சல் மற்றும் பணவிரயம் இன்று வரை ஏற்பட்டு கொண்டு இருக்கிறது.
என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து விருதுநகர் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
DR. A.R.Vijayashankar / Editor
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.