திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டு சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பதவியேற்பு விழா வேட்டவலம் சாலையில் உள்ள ஏ எம் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக தண்டராம்பட்டு பாரத் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் திரு டி அறவாழி அவர்கள் தலைமை வகித்தார்.

திருவண்ணாமலை யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் திரு கே தினேஷ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். அருணை புக்ஸ் சென்டரின் உரிமையாளர் திரு என் சிவகுமார் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வில் திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டு சங்கத்தின் புதிய உறுப்பினர்களாக திரு சுரேஷ் குமார், திரு விக்னேஷ், செல்வி திலகவதி, திரு பிரதீப், திரு சாரதி, திரு குப்பன், திரு கணேஷ் ,திரு சுரேந்தர் மற்றும் திரு ராஜா ஆகியோருக்கு சங்கத்தின் நிறுவனர் டாக்டர் மா ராஜசேகர் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்து அனைவருக்கும் சங்க அடையாள அட்டை வழங்கினார்.
A.R.Vijayashankar / Editor
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi