திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தேர்தல் முடிந்தும் இருதரப்பும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் அதிமுகவினர் கொந்தளிக்க துவங்கியுள்ளனர். பாஜவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிமுக ஓரிரு இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலை நான் தலைவராக இருக்கும் வரை அதிமுக உடன் கூட்டணி கிடையாது என பதிலளித்தார். உடனே அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ‘அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிட்டால் அண்ணாமலையின் வாலை ஒட்ட நறுக்க வேண்டி வரும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
DR. A.R.Vijayashankar/Editor
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.