November 20, 2024

வருமான சான்றிதழ் சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ் பெறுவது எப்படி

சாதி வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் தேவைப்படுவதால் இம்மூன்றையும் ஒரே விண்ணப்பத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

இருப்பினும் இவை மூன்றும் எவ்விதத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை.

நாம் இங்கு இம்மூன்றையும் தனித்தனியாக எப்படிப் பெறுவது என்பதைத் தனித்தனித் தலைப்புக்களில் பார்ப்போம்

வருமான சான்றிதழ் பள்ளி கல்லூரியில் கல்வி கடன்களுக்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன.

மேலும், வங்கியில் கடன் பெற முயலுவருக்கும் திருமண உதவித்திட்டம் இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட அரசின் நல உதவிகள் பெறுவதற்கும் நடுவண் அரசுப்பணிகளில் நேரடியாக அல்லது ஒன்றிய அரசுப்பணியாளர் தேரவானையத் தேர்வுகள் வாயிலாகப் பணியமர்த்தப்படுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிறது.

இந்த வருமானச் சான்றிதழ் பெறுவதற்கு அதற்கென உள்ள விண்ணப்பத்தில் சரியான நீதிமன்ற ஸ்டாம்ப்களை ஒட்டி, அதனுடன் மனுதாரர் வாக்குமூலத்தையும் இணைத்து வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

ஆண்டு வருமானம் பன்னிரெண்டாயிரத்திற்குக் குறைவாக உள்ளவர்கள் ரூபாய் இரண்டுக்கும் அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூபாய் பன்னிரெண்டுக்கும் நீதிமன்ற விலை ஸ்டாம்ப் ஓட்ட வேண்டும்.

தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த முத்திரை வில்லைகளை ஓட்ட வேண்டியது இல்லை.

வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி,

மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார்.

ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்குக் குறைவாக இருந்தால் மண்டலத்துணை வட்டாட்சியர்களும் அதற்கு மேல் ரூபாய் மூன்று இலட்சம் வரை வட்டாட்சியரும் சான்று வழங்குவர்.

வருமானம் என்பது மாறும் தன்மையுடன் இருப்பதால் வருமானச் சான்றிதழ் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல.

எப்பொழுது என்ன காரணத்திற்காக வருமானச் சான்றிதழ் வாங்கப்படுகிறதோ,

அப்பொழுது அந்தக் காரணத்திற்காக மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும்.

பிறகு மீண்டும் வேண்டுமென்றால், இன்னொரு முறை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

ஆ.இர.விஜயஷங்கர்
வெளியீட்டாளர் – அதிரடி சட்டம்