சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் அதிரடி சஸ்பெண்டு.

நாகர்கோவில் – ஜூன் – 10,
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்திற்கு நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்த சில ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான லாரிகளில் பாறைக்கற்கள் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது. ஆரல்வாய்மொழி பகுதியில் சோதனை சாவடி

அமைக்கப்பட்டு அவ்வழியாக வரும் லாரிகளில் காணப்படும் பாறை கற்களில் எடையை கண்காணிப்பது அதிக பாரம் ஏற்றி செல்வதை தடுப்பது முறையான பாஸ் உள்ளதா ? என ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர்.

அப்படி சோதனை செய்யும் போது லாரி ஒட்டுனர்களிடம் இருந்து சோதனைச் சாவடியில் உள்ள போலீசார் லஞ்சம் வாங்குவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களின் ஒருவர் லாரி ஓட்டுநர்களிடமிருந்து பணத்தை வாங்கி புத்தகத்திற்க்கு அடியில் மறைத்து வைப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் விசாரணை மேற்கொண்டார் இதையடுத்து சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் மூன்று பேர் லாரி ஓட்டுனர்கள் இருந்து பணம் வாங்கியது தெரிய வந்தது இதனால் மூன்று பேரையும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லஞ்சம்வாங்கியது தொடர்பான விசாரணை மூன்று பேரிடமும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் – போர்முனை

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?