October 6, 2025

சிவகங்கை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்டங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி குன்றக்குடி ஆவுடை பொய்கையில் டாக்டர். பிரபு அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 20லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளாக மூன்று சக்கர மிதிவண்டி, 800 குடும்பங்களுக்கு 5கிலோ வீதம் அரிசி, பருப்பு, எண்ணைய், உளுந்து, உப்பு அப்பளம் ,மைதா, ரவை, சேமியா, புளி சக்கரை ஆகிய 15 பொருட்கள் கொண்ட மளிகை பொருட்களை கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் புதுக்கோட்டை திரு.பர்வேஸ், மதுரை திரு.கல்லானை, திருச்சி திரு.செந்தில், திரு.சுந்தர், திரு.சிவா, திரு.ரவிசங்கர், திரு.அருள், சிவகங்கை திரு.ஜோசப், திரு.முத்துபாரதி, மதுரை தாமு, திண்டுக்கல் திரு.நிர்மல், மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

ஆ.இர. விஜயசங்கர்/ஆசிரியர்