
பனப்பாக்கம் பேரூராட்சியில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி செயல் அலுவலர் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்றனர்
குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் தினத்தில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப் படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப் படுகிறது. அதன்படி இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை பேரூராட்சி செயல் அலுவலர் க.குமார் தலைமையில் பில் கலெக்டர் லோகநாதன் உறுதி மொழியினை வசித்தனர். இதில் பேரூராட்சி ஊழியர்கள் ஒன்றினைந்து குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி விழிப்புணர்வு ஏற்றுக்கொண்டனர்.

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார பனபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் க.குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்றார்கள்.

ஆ.இர. விஜய்ஷங்கர்/ஆசிரியர்
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi