குடியாத்தம் அரசினர் மகளிர் பள்ளி பிடிஓ ஆபிஸில் குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் தின உறுதிமொழி விழிப்புணர்வு குடியாத்தம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் தின உறுதிமொழி விழிப்புணர்வு ஏற்றனர்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் குடியாத்தம் தாலுகா நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புத் தின உறுதிமொழி விழிப்புணர்வு நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அகிலா ,குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார். இதில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் ஜமுனா, தங்கமணி இந்திரா காந்தி, குடியாத்தம் முதுநிலை ஒன்றியம் மேலாளர் மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
அதே போல் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
- ஆ.இர.விஜயஷங்கர்
- ஆசிரியர் – போர்முனை
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.