வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். சிவக்குமார் இவர் குடியாத்தம் பதிவு அலுவலகத்திற்குட்பட்டு ஒடுகத்தூர் செல்லும் பகுதிகளில் தனி நபருக்கு சொந்தமான 46 ஏக்கர் இடத்தை 10 பேருக்கு முறைகேடாக பதிவுச் செய்ததன் பேரில் வழக்குத் தொடர்பாகவும் மற்றும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்டு கசம் பகுதியில் உள்ள church தேவாலயம் இடம் சம்பந்தமாக கவுன்சிலர் ஒருவரின் கணவர் கூறியவரின் பெயருக்கு பதிவு செய்துள்ளார். தனிநபருக்கு பதிவு செய்ததன் காரணமாகவும் இவர் மீது பல்வேறு முறைகேடுகள், பல கோடிகள் சொத்துக்கள் வாரி குவித்ததாகவும், அதுமட்டுமின்றி பத்திரிகையாளர்கள தொடர்ச்சியாக இவரைப் பற்றி பல்வேறு செய்தி நாளிதழ்கள், மாத இதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் என்பவரை வேலூர் மண்டல பதிவுத்துறை டிஐஜி.. டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து. காட்பாடி பதிவு அலுவலகத்தில் லஞ்ச வசூல் வேட்டையில் மீதம் இருக்கும் இரு பெருச்சாளிகள் நித்தியானந்தம், குமரன் ஆகிய இருவரும் எப்போது துறை ரீதியாகவும், விஜிலன்ஸ் போலீஸாரிடம் மாட்டிக் கொள்வார்கள் என்று எதிர்நோக்கி காத்திருக்கும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தின் அருகாமையில் இருக்கும் ஆவண எழுத்தாளர்கள்..
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் - போர்முனை
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.