
அறந்தாங்கி ஜூன் 18
அறந்தாங்கி பகுதிகளில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
இறைத்தூதர் இப்ராஹீமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அறந்தாங்கி, கீரமங்கலம், வெட்டிவயல், கட்டுமாவடி, கிருஷ்ணாஜிப் பட்டினம், வடக்கம்மாபட்டினம், அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா ஆகிய பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றி, சொற்பொழிவை கேட்டு, பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் ஆண்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
ஆத்மநாதன்
அறந்தாங்கி போர்முனை

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line