November 16, 2024

பண்ருட்டி அருகே தொகுப்பு வீடு மேற்கூரை திடீரென இடிந்து விபத்து

பண்ருட்டி. ஜீன்.24. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழருப்பு ஆதிராவிட பகுதியை சேர்ந்தவர் சுந்திரவேல் அஞ்சலை தம்பதினர். கூலி தொழிலாளியான மேற்படி தம்பதினர் நான்கு குழந்தைகளுடன் சுமார் 35 ஆண்டுக்கு முன்னதாக அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென சத்தம் கேட்டது சத்தம் கேட்டதை அறிந்த அஞ்சலை என்ன சத்தம் என பார்த்த போது தனது வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தமிட்டுள்ளார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அவரது தொகுப்பு வீட்டின் சிமெண்ட் மேற்கூரை தளம் முழுவதும் இடிந்து வீட்டின் உள்ளே விழுந்துள்ளது. அதில் இருந்த அனைத்து பொருள்களும் சேதம் அடைந்துள்ளது. இதனைப் பார்த்து அவர் செய்வது அறியாமல் திகைத்து அழுதபடி கூவல் இட்டனர். இதனை அடுத்து அவர் கூறுகையில் எங்களுக்கென இருந்த ஒரு வீடும் இடிந்து விழுந்தது. தற்பொழுது எனது குழந்தைகளை அழைத்து இங்கு செல்வது என புரியவில்லை என மேலும் குழந்தைகளின் உடைமைகள் அனைத்தும் வீட்டினுள் சிக்கியுள்ளது. உன்ன உணவு உடுத்த உடை என எதுவுமே இல்லாமல் நாங்கள் நிராகதியாக நிற்கிறோம் என கூறி அந்த பெண்னின் அழுகுரல் அனைவரையும் கலங்க வைத்தது. எனவே எங்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரும் உடனடியாக வீடு வழங்கி எங்கள் வாழ்வாதாரத்துக்கான நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.