November 17, 2024

பணத்தை கண்டால் சிரிப்பு எலியோரை கண்டால் அலட்சிய பேச்சு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்.

சிவகங்கை. ஜூலை- 07.

சிவகங்கைமாவட்டம் காரைக்குடியில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைந்துள்ளது இந்த கிளை அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இதில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார் இவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நான்தான் என்னை மீறித்தான் எதுவும் நடக்கும் காரைக்குடியை பொறுத்தவரையில் எனது கட்டுப்பாட்டுக்கு கீழ் மட்டுமே இயங்க வேண்டும் என அதிகாரம் செலுத்துவதாகவும் மேலும் கையூட்டு வாங்குவது முதல் இடத்தைப் பிடித்து ள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுகொள்ளாதது ஏன் ?என்பது கேள்விக்குறியாகவே உள்ளது அது மட்டும் அல்லாது இவர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களிடையே கண்ணியமற்ற முறையிலும் ஒருமையிலும் பேசி வருவதாக இவர் மீது ஏற்கனவே நாளிதழ்களில் புகார் எழுந்த வண்ணம் உள்ளது அது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் வட்டார மண்டல போக்குவரத்து அலுவலர் ஆகியோர் விஜயகுமாரை கண்டித்ததாகவும் இது போல் தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில் அவர் தொடர்ந்து பொதுமக்களிடையே கண்ணியமற்ற முறையிலும் ஒருமையிலும் பேசி வருவதாக சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள் லைசென்ஸ் எடுக்க வருபவர்கள் வாகனத்திற்கு எண் வாங்க வருபவர்கள் என்ற பலரும் இங்கு வந்த வண்ணம் உள்ளனர் இதில் எண்ணற்ற ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் வெளி உலகம் அறியாதவர்கள் பலரும் வருகிறார்கள் அரசு அலுவலர் பொதுமக்களுக்காக பணியாற்ற வேண்டும் மக்களுக்காக மட்டுமே செயல்படக்கூடிய அலுவலகங்களில் இது போன்ற பணத்திற்காக பல்லைக் காட்டும் அதிகாரிகளும் இருந்து வருவதாக கூறுகிறார்கள் இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மட்டுமே மற்ற அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் இதுபோல் தவறுகளில் ஈடுபட மாட்டார்கள் என்றும் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது தனக்கு உயர் அதிகாரிகள் மட்டம் வரை செல்வாக்கு உள்ளவர் என்னை எவர் என்ன செய்ய முடியும் என்ற மமதையுடன் உலா வரும் விஜயகுமார் மீது நேர்மை மிக்க அதிகாரிகளில் சட்டம் பாயுமா அல்லது லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா இல்லை ஏற்கனவே கண்டுகொள்ளாதது போல் மீண்டும் விட்டு விடுவார்களா என்பது கண்ணியமிக்க அதிகாரிகளின் கையிலே உள்ளது என்றும் சமூக ஆர்வலர் வரதராஜன் கூறினார். அலுவலர்கள் சிலரும் இவர் மேல் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர் ஆனால் தங்கள் பணிக்கோ அல்லது தங்கள் வாகனத்திற்கு இவர் இடையூறு ஏற்படுத்துவார் என்ற எண்ணத்தினாலே நேரடியாக யாரும் புகார் அளிக்க மறுத்த வண்ணம் உள்ளனர் பொது மக்களின் மரியாதைக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இதுபோல் அதிகாரிகள் மீது ஆற்றல் மிக்க ஆட்சியர் சிறப்பாக பணியாற்றும் முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுப்பாரா என்று காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்.