சேலம் மாவட்டம்- காடையாம்பட்டி வட்டம்- வேப்பிலை பஞ்சாயத்து- மங்கனிக்காடு மற்றும் தட்ராவூர் கிராமத்தில் தான் கடந்த பல ஆண்டுகளாக மரண பயத்தில் வாழ ந்து வரும் ஊர் கிராம மக்கள்.
இந்த குக்கிராமத்தை சுற்றி அடர்ந்த குன்றுகள் நிறைந்தது.
கடந்த நூறு ஆண்டுகளாக வன பகுதியாக பாவிக்கபட்டு தமிழக அரசின் வன பாதுகாப்பு திட்டத்தில் பல லட்சம் மரங்கள் நடபட்டு தற்சமயம் ஓங்கி வளர்ந்து நிற்குன்றன.
இந்த மலை வன பகுதியின் அடிவாரத்தில் அமையபட்ட தாட்ராவூர் சிறு கிராமம்.
தற்சமயம் 200 ஏழை , குறு விவசாயிகள் அடிப்படை வசதிகள் கூட கிடைக்க பெறாமல் வாழ்ந்து வருகின்றனர்.
தூய்மையான குடிநீர் இல்லை.
அடிப்படை சுகாதார வசதிகள் நிறைவேற்றாத வேப்பிலை பஞ்சாய்த்து.
( பணியாள் இல்லாத பூட்டி நிலையில் சுகாதார கட்டிடம் பெயரளவில்.)
பஞ்சாயத்து பள்ளி வளாகம் தூய்மையற்ற நிலையில்.
இந்த தாட்ராவூர் கிராம மக்கள் இரவில் நிம்மதியாக உறங்கி பல ஆண்டுகள் ஆகின்றன.
சிறு விவசாய நிலங்கள் பாழடைந்த நிலையில்.
ஆடு மாடுகள் குடிப்பதற்கு கூட நீர் இல்லை அனைத்தும் மாசு படிந்துள்ளது.
தினம் பொது மக்கள் உண்டும் உணவில் கல்லும், மண்ணும் மாசு கலந்தவையாக..
பல உயிர்கள் காரணம் தெரியாமல் மருத்துவ குளருபடியால் மாய்ந்து போனது …
இதே நிலை வன குன்றுகளுக்கெ மேற் பரப்பில் அமைய பெற்ற மாங்கனிக்காடு கூறி கிராமம்.
இந்த கிராம அப்பாவி மக்களுக்கும் மேற் சொன்ன அனைத்து துயரங்களும், பாதுகாப்பற்ற உறைவிடங்கள்.
இந்த இரு கிராம வன பகுதியில் சுமார் 400 குடும்பங்கள் பஞ்யத்து நிதிகள் பயன்படுத்தபடாமல் வரட்ச்சியாகவே உள்ளது.
இந்த 400 பொது மக்களின் மரண படுக்கைநில் தூங்க சென்று மரண பயத்தில் தினம் விடியல் நடக்கிறது.
காரணம்??
இந்த உரு பகுதிகளுக்கும் மத்தியில் 1000 அடி மேற்பரப்பில் அமைய பெற்ற கற்பாறை உடைக்கும் அரவை பணிகள்.
ராஜா மற்றும் செல்வம் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளில் உரிய அரசு அனுமதி பெறாமல் நடத்தி வருகின்ற கள்பாறை குவாரிகள்..வன துறை வழங்கபடாத போலி ஆவணம்.மாசு கட்டுபாடு அதிகாரிகள் வழங்கியதாக கூறபடும் போலி ஆவணம் ( துறை சார்ந்த சீல் மட டும் உள்ளது அதிகாரி கையெழத்து இல்லாமல் )
வெட்டி எடுக்கபடும் வனம் சார்ந்த அரசு புறம்போக்கு நிலம் பல ஆயிரம் ஏக்கர் யாரால் என்பது பட்டா நிலமாக மாறியது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
சர்வே பட்டா எண் 410/1+ 410/3 மட்டும் தனி நபருக்கு கைமாறியது எப்படி ? எப்படி சாத்தியம்.?
அந்த நில குன்றுகளை சுற்றி அமைந்துள்ள அரசு கரடு புறம்போக்கு நிலங்கள் பல லட்சம் ஏக்கர் தற்சமயம் தனிநார் குவாரி கட்டுப்பாட்டில் வந்த்து குறித்து சேலம் மாவட்ட வருவாய் நிர்வாகம் பமில் கூற மறுக்கின்றது.
இந்த ஊர் பொது மக்கள் 400 குடும்பங்களின் கோரிக்கை மனுக்கள் எல்லாம் வலுவாந் துர்வாகம், வன முறை திர்வாகம், மாசு கட்டுபாடெ திர்வாகம் , மைன்ஸ், குவாரி கண்காணிப்பு அதிகாரி ஆகியோரின் கூட்டு சதி, பல லட்சங்கள் லஞ்ச லாவன்யம் இந்த ஊர் மக்களை இழிச்சவாயர் கூட்டமாக பார்க்கின்றது.
வட்டார வளர்ச்சி அதிகாரி ( BDO ) இந்த பகுதி வந்து பல ஆண்டுகள் ஆகின்றன.கிராம மக்களுன் எந்த கோரிக்கையையும் கவனிக்க மறுக்கும் கிராம உதவி அலுவலர்- வருவாய் ஆய்வாளர்- வட்டாச்சுயர்.
வேப்பிலை பஞ்சாயத்து கடந்த 10 ஆண்டுகளில் எங்கே போனது ?
இன்று 25-05-24 கூட்டு நடவடிக்கை குழ- தமிழ்நாடு அந்த குக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 3 மணி நேரம் தாட்ராவூர் மற்றும் மாங்கனிக்காடு பகுதி வாழ் மக்களை திரு சரஸ்ராம்ரவி – ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நேரில் சந்தித்தோம்.
குறைகளை கேட்டறிந்ததோடு கண் முன்னே அப்பாவி மக்களின் அவலங்களை அவர்கள் தினம் மரண படுக்கையில் உறங்காமல் விடியலை சுமந்து கடந்து போகும் வாழ்வை அறிய முடிந்தது.
இதற்கிடையில் கடந்த சில தினங்களாக
குவாரி அதிபர்கள் ராஜா, செல்வம் அவர்களது கூட்டாளிகள் இந்த சட்டத்திற்கு புறம்பான குவாரியை மூட வலுயுறுத்தும் கிராம மக்களை குறிப்பாக இளைஞர்களை மிரட்டியும் , அச்சுறுத்தியும், பொய் புகார் கொடுத்து வழக்கு பதிய தீவட்டிபட்டிகாவல் துறையின் உதவியை நாடி வருவதை வன்மையாக கன்டிக்கின்றோம்.
இந்த நிலையை மாற்றி அமைத்திட தமிழக அரசின் விடியல் அரசு முயலுமா ?
Dr. A.R.Vijayashankar / Editor

More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money