சமீபத்தில் பிறப்பு சான்றிதழ் அடையாள ஆவணமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிறப்பு சான்றிதழ்களை வாங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஜனவரி 1, 2000க்கு முன் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க இந்த வருடம் டிசம்பர் 31 வரை அவகாசம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2000க்கு பின் பிறந்து 15 வருடமாக பிறப்பு சான்றிதழ் வாங்காதவர்களுக்கும் இந்த வருடம் டிசம்பர் 31 வரை அவகாசம் விதிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முறையிட்டு பிறப்பு சான்றிதழ் வாங்கிக்கொள்ளலாம், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிராம பஞ்சாயத்துகளில் பதிவுசெய்த பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்று இங்கே பார்க்கலாம்.
அடையாள அட்டைக்காக கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பிறப்பு சான்றிதழ்களை மக்கள் எளிதாக டவுன் லோடு செய்ய முடியும். இதற்காக தமிழ்நாடு அரசு https://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp என்ற இணைய பக்கத்தை வெளியிட்டு உள்ளது.
இதில் உள்ளே சென்றதும் பர்த் சர்டிபிகேட் என்ற பக்கம் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பொதுவாக குழந்தை பிறந்த மருத்துவமனையில் RCHID என்ற பதிவெண்ணை கொடுப்பார்கள். மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்ததற்கான அடையாளமாக RCHID என்ற சீரியல் நம்பர் கொடுப்பார்கள். இந்த நம்பரை அந்த பக்கத்தில் பதிவிட வேண்டும். இதை தொடர்ந்து அதே பக்கத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரை கொடுக்க வேண்டும்.
இது போக.. பாலினம், வயது , ஊர், பிறந்த தேதி ஆகிய விவரங்களை கொடுக்க வேண்டும் . இதை பதிவு செய்ததும் கீழே உள்ள பிறப்பு சான்றிதழ் காட்டப்படும். இந்த பிறப்பு சான்றிதழை கிளிக் செய்து உடனே டவுன் லோடு செய்ய முடியும்.
அடையாள ஆவணம்; இந்த நிலையில்தான் நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.
எதற்கெல்லாம் பயன்படும்: மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ,மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது.
இந்த சட்டம் மூலம் இனி பிறப்பு சான்றிதழை முக்கியமான ஆவணமாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்ய முடியும். ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும்.
இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை. இப்போது பெறுவதன் மூலம் டிஜிட்டல் பதிவு மூலம் பொது சேவைகள் மற்றும் சமூக நல திட்டங்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும் பெற்றிட முடியும். இந்த சட்டம் அமலுக்கு வருவதால் இனி பல சேவைகளில் இதை அடையாள அட்டையாக, ஒரு முக்கிய ஆவணமாக வழங்க முடியும்.
ரேஷன் அட்டையை போல இதையும் இருப்பிற்கான அடையாளமாக பயன்படுத்த முடியும். ஆனாலும் பல இடங்களில் ஆதார் கேட்கப்படுவதால் இந்த அட்டை எந்த அளவிற்கு உதவும் என்று தெரியவில்லை. அதே சமயம் கல்லூரி சேருவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த அட்டை உதவியாக இருக்கும்
Dr. A.R. Vijayashankar/ Editor
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi