
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த வாரம் முழுவதும் மாபெரும் மகாபாரத கண்காட்சி கல்லூரியின் ஜி ஆர் கலையரங்கில் சமஸ்கிருத துறையின் சார்பில் நடைபெற்றது. முன்னதாக கல்லூரியின் செயலர் மற்றும் அறங்காவல் துறையின் தலைவர் திருமதி ஷீலா பாலாஜி தலைமை தாங்கி இந்நிகழ்வினை துவங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹேமா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியில் தாளாளர் திரு சீனிவாசன் மாணவர்களுக்கு மகாபாரத உள்ளார்ந்த தத்துவங்களை விளக்கினார். கல்லூரியின் சமஸ்கிருதத் துறை தலைவர் பேராசிரியர் சேஷாத்திரி மற்றும் பேராசிரியர் பரணிதரன் தலைமையிலான சமஸ்கிருத மாணவர்கள் இந்நிகழ்வினை தத்ரூபமாக காட்சி அமைப்புகளுடன் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகாபாரத கதையினை ஒட்டிய பல்வேறு காட்சி அமைப்புகள், 18 நாள் போர் முறை அமைப்புகள், ஆயுதங்கள், பீஷ்மர் அம்பு படுக்கை போன்றவை சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் நாம் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் போன்றவை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் விளக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இறுதியாக சமஸ்கிருதத் துறை தலைவர் பேராசிரியர் சேஷாத்திரி நன்றி உரை ஆற்றினார்


More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line