.பென்னாகரம், ஜூன்.14-பென்னாகரம் அருகே தாசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பகுதியில் கல்லால் தலையில் தாக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் பள்ளி மாணவன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே திப்பட்டி பள்ளம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், குமுதா தம்பதியின் இரண்டாவது மகன் யாதவன் (17). இவர், பண்டள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.புதன்கிழமை மாலை தாசம்பட்டி பகுதியில் இருந்து யாதவன், திப்பட்டி பள்ளத்தில் உள்ள தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்த நிலையில் யாதவன் வியாழக்கிழமை அதிகாலை பென்னாகரம் அருகே தாசம்பட்டி உயர்நிலைப் பள்ளியின் அருகாமையில் தலையில் கல்லால் தாக்கப்பட்ட முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பென்னாகரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ஆ.இர.விஜயஷங்கர்
- ஆசிரியர் – போர்முனை

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line