October 5, 2025

தொடர்ந்து 47 வது முறை இரத்ததானம் செய்த பெண் கவுன்சிலருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

தொடர்ந்து 47 வது முறை இரத்ததானம் செய்த பெண் கவுன்சிலருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி மன்ற 18 வது வார்டு அதிமுக உறுப்பினர் ஜெயப்பிரியா ரகுமான் தொடர்ந்து 47 வது முறையாக இரத்ததானம் அளித்து சமூக பணியில் தன்னை ஈடுபடுத்தி வந்த நிலையில் உலக இரத்த தான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கெளரவித்தார் பதக்கம் பெற்ற கவுன்சிலருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்,