January 15, 2026

பண்ருட்டியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை

பண்ருட்டி. ஜீன்.17. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இதனை தியாகத் திருநாள் என்றும் அழைக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஹஜ்ரத் நூர் முகமது ஷா பள்ளி வாசலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடலூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஏழை எளிய மக்களுக்கு இஸ்லாமியர்கள் குர்பானியை தானமாக அளித்தனர்.