November 21, 2024

கோட்லாம்பாக்கம் ஸ்ரீ வானத்தூரம்மன் சாகை வாரத்தல் திருவிழா

பண்ருட்டி. ஜீன்.23. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கம் கிராம ஸ்ரீ வானத்தூரம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா கடந்த 21 ம்தேதி பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மஹா தீபாராதனை, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
சாகை வார்த்தல் நிகழ்ச்சி முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை அடுத்து சாகை வார்த்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கூழ் மற்றும் பொங்கல் எடுத்து வந்து படையலிட்டு அம்மனுக்கு வழிபாடு செய்து பின்பு பக்தர்களுக்கு வழங்கினர். இரவு வானவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
நேற்று 108 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. கோட்லாம்பாக்கம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.