November 16, 2024

மருத்துவ குழுவினர் இலவச கண் பரிசோதனை செய்த போது

ஜுன் 27. குடவாசல்
மாபெரும் இலவச மருத்துவ முகாம் சுவாமி தயானந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமை அக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சொசைட்டி, சிவா மெடிக்கல் லேப், அமெரிக்க தெற்கு அலபாமா பல்கலைகழகம், திருத்துறைப்பூண்டி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல், திருவாரூர் மெடிக்கல் சென்டர், அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தினர்.இந்த முகாமில் உடல் நிறை குறியீட்டு எண், இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனைகள், ஹீமோகுளோபின், இசிஜி, சிறுநீர் தொற்று பரிசோதனை, கண் பரிசோதனை போன்ற முழு உடல் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக நடைபெற்றது.இந்த முகாமை அக்கல்லூரியின் தாளாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். பேராசிரியர் மற்றும் யூத் ரெட் கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். அமெரிக்க தெற்கு அலபாமா பல்கலைகழக பேராசிரியர்கள் டாக்டர் .பத்மமாலினி துளசிராமன், டாக்டர் நான்சி ஆயர்ஸ் ரைஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் ஹேமா மருத்துவ முகாமிற்கு தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி ராய் ட்ரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவரும்,ஐக்கிய நாட்டு சபையின் தன்னார்வலருமான முனைவர் துரை ராயப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த மாபெரும் இலவச முழு உடல் பரிசோதனை முகாமில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள், பேராசிரியர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.கலந்து கொண்ட பெரும்பாலான பயனாளிகளுக்கு மருந்து, மாத்திரை போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது. அமெரிக்கா தெற்கு அலபாமா பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் லெனல் யொன்னா ஆன்டர்சன், ரேய்ட் ஜோசப் குரோஜின், மெளரா விக்டோரியா ஹாக்கின்ஸ், கொன்னர் கிரிகோரி லெவிஸ், சுபாங்கி சிங், ஸாகம் அல்குதா கலந்து கொண்டு சிகிச்சையளிக்க உதவினர். மேலும் திருவாரூர் மெடிக்கல் சென்டர் மூத்த புற்று நோயியல் மருத்துவர் பிச்சையம்மாள், டாக்டர்.மோனிஷா, டாக்டர்.செல்வ கணபதி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழு அனைவருக்கும் சிகிச்சை அளித்தனர், சிவா மெடிக்கல் லேப் ஊழியர்களான விஷ்ணுப்பிரியா, கலைச்செல்வி, ஜோஸ்பின் மேரி, பரணி, மருந்தாளுநர் சண்முகப் பிரியா ஆகியோர் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். அகர்வால் கண் மருத்துவமனை ராம்குமார் தலைமையிலான குழுவினரும் , ஆப்டோமெட்ரிஸ்ட் சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
இந்த முகாமை சிவா லேப் உரிமையாளர் பால சுந்தரம், சிவசங்கர், மருத்துவர் அகிலா ஆகியோர் வழி நடத்தினார்கள். கல்லூரி நிர்வாகம் அனைவருக்கும் நன்றி கூற முகாம் சிறப்பாக நிறைவு பெற்றது.

மேலும் இந்த குழுவினர் மூலம் ஏற்கெனவே அம்மையப்பன் சேவா யோகா முதியோர் இல்லத்தில் 60 முதியோருக்கு மருத்துவ பரிசோதனைகளும், அங்குள்ள குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும், அம்மையப்பன் ராம் டெக் தொழிற்சாலையில் பணிபுரியும் 45 தொழிலாளருக்கு முழு உடல் பரிசோதனையும், திருவாரூர் மாவட்ட வடகரை உயர்நிலை பள்ளியில் படிக்க கூடிய 380 மாணவர்களுக்கு இரத்த வகை, சிறுநீர், கண் மருத்துவ பரிசோதனைகள் செய்து அவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.