January 15, 2026

பண்ருட்டியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி. ஜீன்.30 கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சமீபத்தில் CBI மற்றும் ED ஐ ஒரு வழக்கில் தொடர்ந்து கைது செய்ததை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட தலைவர் ஞானராஜ் தலைமை தாங்கினார். பாபு முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மண்டல தலைவர் இயன்றுமுறை மருத்துவர் திரு தேவகுமார் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக பாக்கியராஜ் மாநில துணைச் செயலாளர் தொழில்நுட்ப பிரிவு, கௌரி பாபு மாநில மகளிர் அணி செயலாளர், கிங்ஸ்டர் மாநில ஊரக வளர்ச்சிப் பிரிவு செயலாளர். கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஷர்மிளா பர்வீன், மகளிர் அணி செயலாளர், சக்தி மாவட்டச் துணைச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். பண்ருட்டி தொகுதி பொறுப்பாளர்கள் பூமிநாதன் பண்ருட்டி தொகுதி செயலாளர், வசந்த ராஜன் மாவட்ட செயலாளர் தொழில்நுட்ப பிரிவு, வெற்றி ஓட்டுனர் அணி செயலாளர், அருள்மொழி பூமிநாதன் தொகுதி மகளிர் அணி செயலாளர், கடவுள் ஊரக வளர்ச்சி பிரிவு செயலாளர், திட்டக்குடி தொகுதி பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், கடவுள், ஜெகநாதன், செல்வராஜ், நெய்வேலி தொகுதி பொறுப்பாளர்கள் அலெக்ஸ், மாயவேல், தமிழரசன், சரண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.