கந்தர்வகோட்டை ஜீலை 05.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பிசானத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் துளிர் திறனறிவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரச் செயலாளர் ரகமத்துல்லா துளிர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 35 ஆண்டுகளுக்கு மேலாக துளிர் திறனறிவுத் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தேர்வில் மாணவர்களுடைய பொது அறிவுத் திறன்,
கணித திறன் உள்ளிட்டவை சோதிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டு விடையளிக்கும் வகையில் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வில் கலந்து கொள்ளக்கூடிய மாணவர்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய போட்டித் தேர்வுகளான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் முன்னோட்டமான தேர்வாக அமைந்துள்ளது.
மாணவர்கள் தொடர்ந்து தேர்வில் பங்கேற்குமாறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் மாதந்தோறும் வெளிவரக்கூடிய துளிர் இதழை வாசிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய புத்தகத் திருவிழாவில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும்,
மாணவர்கள் பாட புத்தகங்களை தாண்டி பொது அறிவு புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என பேசினார்.
நிறைவாக ஆசிரியை லீயோ மங்கையர்கரசி நன்றி கூறினார்.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் - போர்முனை
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.