
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்…..?
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மரணம் ஓலை சத்தம் கேட்ட வண்ணமாகவே உள்ளது.குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்த பரபரப்பு தற்பொழுது வரை தமிழக முழுவதும் இருந்து வருகிறது. ஒரு கட்சியின் மாநில தலைவருக்கு இவ்வாறான நிலை என்று அரசுக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்வது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் இதற்கு பா ரஞ்சித் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையானது முதல் நல்லடக்கம் வரை என அனைத்திலும் வன்முறையின்றி நடக்க முன்னின்ற பா ரஞ்சித்தை அனைவரும் கண்டனர்.
மேற்கொண்டு மாநில தலைவருக்கு உண்டான பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு என்பது குறித்து நல்லடக்கம் முடிந்த கையோடு அரசுக்கு எதிரான தனதுகண்டனங்களை பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும் பா ரஞ்சித்தின் ஆரம்பகட்ட வாழ்க்கையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் ஒரு தூணாக இருந்துள்ளார். இதன் விசுவாசமாகத்தான் பகுஜன் சமாஜ் கட்சியி ரீதியாக எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அதில் முதலாளாக பா ரஞ்சித் இருப்பதுண்டு. இவரைப் போலவே ஆம்ஸ்ட்ராங்கும் பா ரஞ்சித்தின் பல முக்கிய நிகழ்ச்சிகளில் முதலாளாக இருந்துள்ளார்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பா ரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்கள் இசை வானம் உள்ளிட்டவைகளில் ஆம்ஸ்ட்ராங் கலந்துகொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பா ரஞ்சித் தனக்கு கிடைக்கும் மேடைகளிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கத்தை பற்றிபேசியுள்ளார். இவ்வாறு இருக்கும் சூழலில் ஆம்ஸ்ட்ராங் தொண்டர்கள் பலர் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவராக பா. ரஞ்சித் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.
அதுமட்டுமின்றி பா. ரஞ்சித்-திற்கு நெருங்கிய தொடர்பான எழுத்தாளர் பிரபா, எந்த ஒரு வன்முறையுமின்றி நல்லடக்கம் செய்தது முதல் அனைத்திற்கும் வழிகாட்டியாய் தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீ காட்டியுள்ளாய், ஒரு கூட்டத்தின் தலைவன் இல்லையென்றால் அந்தக் கூட்டமே இல்லாமல் போகாது, முன்பை விட சக்தி வாய்ந்த கூட்டமாக மாறும் என்ற பாணியில் பா.ரஞ்சித்தை குறித்து கூறி பதிவிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கையில் அடுத்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக பா.ரஞ்சித் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் - போர்முனை


More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line