திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு ஏழை மக்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யவும் கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை பெருக்கவும், 50 சதவீதம் மானியத்தில் புறக்கடை நாட்டின கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்த 1 பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம் 4 வார கோழி குஞ்சுகள் வழங்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1800 பயனாளிகளுக்கு கிராம ஊராட்சியில் உள்ள பெண் பயனாளிகளுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் முகாம்களில் கீழ்காணும் தகுதியுள்ள கிராமபுற பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்
நிபந்தனைகள்: ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், ஆதரவற்ற, திருநங்கை, மாற்றுத்திறனாளி, கணவனால் கைவிடப்பட்ட பெண் பயனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் பயனாளி அந்த ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் பயனாளியின் ஆதார அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் பயனாளி 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புத்துறையால் செயல்படுத்தப்பட்ட கோழி வளர்ப்பு திட்டங்களில் பயனடையவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்று அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சரவணன்
செய்தியாளர் போர்முனை
திருவண்ணாமலை
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.