கந்தர்வகோட்டை ஜீலை 11.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வளமையத்தில் ஹைடெக் லேப் கணினி ஆய்வக பயிற்றுநர்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் அனைவரையும் வரவேற்றார்.
கந்தரவகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா வாழ்த்துரை வழங்கினார்.
ஹை டெக் லேப் கணினி ஆய்வக பயிற்றுநர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் எண்ணும் எழுத்தும் புத்தகத்தை எவ்வாறு பதிவேற்றுவது, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போர் விவரங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது மற்றும் மேப்பிங் செய்வது போன்ற எமிஸ் பணிகளை சுலபமாக எளிமையாக புரிந்து கொண்டு மேற்கொள்வது மற்றும் ஹைடெக் லேப் பயன்படுத்துவது போன்ற விவரங்களும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.எமிஸ் பணிகளை திறம்பட செய்ய வேண்டும். இணைப்பு பள்ளிகளில் உள்ள பணிகளையும் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.நிறைவாக சிறப்பாசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.
ஆ.இர.விஜயஷஙகர்
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.