வேப்பூர், ஜூலை 13 :
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெண்ணிடம் 5 சவரன் தாலிச் செயினை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். வேப்பூர் அடுத்த நல்லூரைச் சேர்ந்தவர் வேலு மனைவி லட்சுமி, 65; இவர் நல்லூர் வார சந்தை எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
(12.07.2024) வெள்ளிக்கிழமை, மதியம் 12:00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் கடையில் பொருள் வாங்குவது போல் பேச்சு கொடுத்து கொண்டு, லட்சுமி அணிந்திருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமராகாட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: ப.ஆனந்த்
வேப்பூர் போர்முனை
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.