
பண்ருட்டி. ஜுலை.17. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பணி நிறைவு மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா முத்தாண்டிகுப்பத்தில்
நடைபெற்றது. பண்ருட்டி ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார் மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன் ஒன்றிய துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் ராஜா ராமன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் அருள் பிரகாசம் வரவேற்புரை நிகழ்த்தினார் . ஒன்றிய து.செயலாளர் காசிநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களான சொரத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா, கீழக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கரத்தினம், நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் பாண்டுரங்கன், நன்னிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஆறுமுகம்
மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் நடுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி, மேலிருப்பு இடைநிலை ஆசிரியை தமிழரசி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டன.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன், மாநிலத் தலைவர் இரவி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் கடலூர் வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன், குமராட்சி வட்டார கல்வி அலுவலர் நடராஜன், பண்ருட்டி வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளஞ்செழியன், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் தாமோதரன், மாநிலத் துணைத் தலைவர் விஜயகுமார், மாநில கொள்கை விளக்க செயலாளர் மோகன், மாநில வெளியீட்டு செயலாளர் மணிவாசகம், மாநில அமைப்பு செயலாளர் சிவகுமார், மாநில தலைமை நிலைய செயலாளர்கள் ரமேஷ், அறிவுடைநம்பி, மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் இரவிச்சந்திரன், மாநில விதிமுறைக் குழு உறுப்பினர் வனத்தையன், மாநில பொது குழு உறுப்பினர் தேவசெல்லப்பா, மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில் குமார், விருதாச்சலம் ஒன்றிய செயலாளர் அனுசுயா, குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சக்திவேல், கடலூர் ஒன்றிய செயலாளர் அந்தோணி ஜோசப் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பண்ருட்டி ஒன்றிய பொருளாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்


More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line