பண்ருட்டி. ஜூலை.20. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 84.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து
பண்ருட்டி நகர மன்ற தலைவர் இராஜேந்திரன் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஆலமர் செல்வன், பொறுப்பு தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் சண்முகவள்ளி பழனி. முகமது ஹனிபா, ரமேஷ், கிருஷ்ணராஜ். பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர் லோகநாதன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தஷ்ணா மூர்த்தி,வார்டு செயலாளர்கள் வேணு, முருகன், செல்வகுமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலச்சந்தர், ராஜா முகமது மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.