
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டாரத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், அப்பகுதியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான பணிநிறைவு பாராட்டு விழா ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள அன்பு மஹால் ஏசி திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சார்க் நாடுகளின் ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் உலக கல்வி அமைப்புடன் இணைந்து செயல்படும் இந்த அமைப்பின் சார்பில், ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் ஆர்.விஜயா தலைமை தாங்கினார்.
வட்டாரச் செயலாளர் நியூட்டன் காபிரியேல் வரவேற்புரை வழங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் எஸ்.குணசேகரன், முன்னாள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.சி,சுந்தரேசன் ஆகியோர் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அரக்கோணம், நெமிலி, திமிரி, வாலாஜா வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money