நத்தம்,மே.24:
நத்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி கருங்கல் ஏற்றி வந்த லாரி
சுரங்கத் துறை அதிகாரி சோதனையில் வியாழக்கிழமை பிடிபட்டது.
நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் பல்வேறு குவாரிகள் உள்ளது. மேலும் இப்பகுதியில் சில குவாரிகள் அரசு அனுமதியின்றி கருங்கல் போன்ற கனிமவளங்களை லாரிகளில் திருடிச் செல்வதாக மதுரை மண்டல சுரங்கத்துறைக்கு புகார் சென்றது. அதன் பேரில் நத்தம் பகுதியில் மதுரை மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சார்ந்த உதவி புவியியலாளர் பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது சமுத்திராப்பட்டி பகுதியில் வந்த டிப்பர் லாரி ஒன்று வந்தது. அதை நிறுத்தி விசாரணை செய்து சோதனை செய்தனர். அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் பெயர் வேணுகோபால் என்பதும் லாரியில் சுமார் 5 டன்னுக்கு மேல் கருங்கல்லை ஏற்றி வந்ததும் அது பூதகுடி அருகே சடையம்பட்டி பகுதியிலிருந்து வருவதாகவும் தெரியவந்தது. மேலும் அரசு அனுமதியின்றி கருங்கல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கருங்கல்லுடன் பிடிபட்ட லாரியை நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் வேணுகோபாலை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Dr. A.R. Vijayashankar / Editor
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.