November 15, 2024

நத்தம் அருகே நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு

நத்தம்,மே.26:

நத்தம் அருகே நான்கு வழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் இருக்கையிலேயே உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்
வழியாக மதுரை, துவரங்குறிச்சி
நான்கு வழி சாலை
அமைக்கப்பட்டுள்ளது.இதில்
நான்கு வழிச்சாலையின் மத்தியில் அச்சாலையை அமைத்த தனியார் நிறுவனம் சார்பில்
பூச்செடிகள் வளர்க்கப்பட்டு
வருகிறது. அந்த பூச்செடிகளுக்கு
தினம்தோறும் தண்ணீர் லாரி மூலம்
தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். தண்ணீர்
லாரியை நத்தம் அருகே ரெட்டியபட்டி அடுத்த
கவரயபட்டியை சேர்ந்த
தங்கராஜ் மகன் சீனிவாசன்
என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை நத்தம் அருகே
பெருமாள்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலை இடையில் அமைக்கப்பட்ட பூச்செடிகளுக்கு
தண்ணீர் லாரி மூலம் தண்ணீர்
பாய்ச்சிக் கொண்டிருந்தபோது
நத்தத்திலிருந்து மதுரையை
நோக்கிச் சென்ற சரக்கு ஏற்றி
வந்த சரக்கு வாகனம் ஓட்டுனரின்
கட்டிப்பாட்டு இழந்து தண்ணீர்
லாரியின் பின்புறத்தில் பலமாக
மோதியது. இதில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிபுரத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் பாண்டி(30) படுகாயத்துடன் இருக்கையில் அமர்ந்த நிலையில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய சரக்கு வாகனத்தில் சிக்கி உயிரிழந்த பாண்டியின் உடலை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து தொடர்பாக நத்தம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

பட விளக்கம் 1:நத்தம்- மதுரை நான்கு வழிச்சாலை பெருமாள்பட்டி அருகே நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சேதமடைந்த தண்ணீர் லாரி மற்றும் சரக்கு வாகனம்