
சிவகங்கை.ஜூன்.12
தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1
ஆகிய 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30-ந் தேதி வெளியிட்டது.
10 ஆம் வகுப்பு கல்வி தகுதி என்றாலும் முதுகலை படித்தவர்கள், என்ஜினியர்கள் என பலரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதினார்கள்.
இதனால் இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் ஆனது.
குரூப் 4 தேர்வு நேற்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு பணி, கண்காணிப்பாளர்கள், நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படையினர், வீடியோ கிராபர்கள், கண்காணிப்பு கேமரா பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பகுதி 1-ல் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.
பகுதி 2-ல் பிரிவில் பொது அறிவியலில் 75 வினாக்களும்,
திறனறிவு தேர்வில் 25 வினாக்கள் என 100 வினாக்களும்,
என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.
வினாக்கள் அனைத்தும் கொள்குறி ‘ வடிவில் இடம் பெற்றிருந்தது.
ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது.
நேற்று நடைபெற்ற குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதினர்.
சுமார் 4 லட்சம் பேர் குரூப் 4 தேர்வில் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
இதன்படி குரூப்-4-ல் ஒரு பதவிக்கு 320 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதனால் ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் உயரும் என தேர்வர்கள் கூறினர்.
குரூப்-4 தேர்வுக்கான முடிவுகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட தமிழ்நடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து பிப்ரவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பையும், அதனைத்தொடர்ந்து கவுன்சிலிங்கையும் நடத்த டிஎன்பிஸ்சி ஆயத்தமாகி வருகிறதாம்.
ஆ.இர. விஜய்ஷங்கர்/ஆசிரியர்
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi