January 15, 2026

அடையபலம் மாரியம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம்.

அடையபலம் மாரியம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம்.

ஆரணி, ஜூன் 14

ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.


ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் உள்ள அண்ணா நகரில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் திருப்பணி முடிந்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் புனித நீரை யாக சாலையில் இருந்து எடுத்துச்சென்று கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் மாரியம்மன் ஆலயத்தில் உள்ள பாலவிநாயகர், பாலமுருகர் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

  • ஆ.இர.விஜயஷங்கர்
  • ஆசிரியர் போர்முனை