பெரியநாயக்கன்பாளையம் சப் ரிஜிஸ்டர் ஆபீஸில் உனக்கு நான் எனக்கு நீ சலித்தவன் இல்லை போட்டா போட்டியில் லஞ்ச வசூல் வேட்டை.. குறட்டையில் விஜிலென்ஸ் போலீஸ்.!!
லஞ்சப் பணத்திற்கு நீயா? நானா??போட்டி போடும் சார்பதிவாளர்கள்?லஞ்ச ஒழிப்புத் துறை பாராமுகமாக இருப்பது ஏன் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி! ஆனால் உண்மையிலேயே மெழுகுவர்த்தி!! என கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளைய சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற சார் பதிவாளர் ரமேஷ் புலம்புகிறாராம்.

காரணம் அதே சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றுகிற அருணா, நான்கு பெண் ஆவண எழுத்தாளர்களை தன் கையில் போட்டுக்கொண்டு தீவிர வசூல் வேட்டையில் கல்லா கட்டுகிறாராம். இரண்டு சார் பதிவாளர்கள் இந்த பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றினாலும் கோடிக்கணக்கான சொத்து மதிப்பு உள்ள ஆவணங்கள் என்றால் அருணா என்கிற பெண் சார் பதிவாளருக்கும், லட்சக்கணக்கான சொத்து மதிப்புடைய ஆவணம் என்றால் அவை ரமேஷ் என்கிற மற்றொரு சார்பதிவாளருக்கும் செல்கிறதாம். பத்திரப்பதிவு விஷயத்தில் கூடவா இப்படி வகைப்படுத்தலிருக்கிறது? என்று பார்த்தால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பல விஷயங்கள் வெளி வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை!

சமீபத்தில் ஆறு மாதங்களுக்கு முன் பெரிய நாயக்கனண பாளையம்
சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்த ஜெய சுதா என்பவரை தேர்தல் நேரம் என்பதைக் கூட மறந்து, கவனம் இன்றி டெபுடேஷன் என்ற பெயரில் பணியிடமாற்றம் செய்துள்ளனர். தற்போது அவரை சஸ்பெண்டும் செய்துள்ளனர். கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள 1. 80 ஏக்கர் அரசு நிலத்தை கடந்த வருடம் தனியாருக்கு கோவை வடக்கு எண் 1 இனண சார் பதிவாளர் ஜெயசுதா மோசடியாக பத்திரப்பதிவுச் செய்து உள்ளார். இது குறித்து வந்த புகாரை அடுத்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்று. தற்போது இவர் டிஸ்மிஸ் செய்யபட்டுள்ளார்.
மாமியார் உடைச்சா மண்குடம்! மருமகள் உடைச்சா பொன் குடம் என்று சொல்வதைப்போல அமைச்சரின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றால் அபராதம் மட்டுமே! அமைச்சரின் சமுதாயம் அல்லாத ஒருவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டு என்றால் பணியிலிருந்து டிஸ்மிஸ் இது என்ன விசித்திரமோ? என புலம்புகின்றனர் சமூக ஆர்வலர்கள. மேலே குறிப்பிட்டுள்ள பெண் சார் பதிவாளர் அருணா, 4 பெண் ஆவண எழுத்தர்கள் மூலமாக வரும் சொத்து பத்திர விஷயங்களில் என்ன வில்லங்கம் உள்ளது? பொறம்போக்கு இடமா? ஆகா லே-அவுட்டா? வீடு இருந்தும் வீடு இல்லாமல் காலி மனை என்று சொல்கிறார்களா? தொலைந்து போன பத்திரத்தை காவல்துறையின் அறிக்கையில்லாமல் வரும் பத்திரமா? பஞ்சமி நிலத்தை அயன் பட்டா இல்லாமல் பதிவுச் செய்ததா? விவசாய நிலத்தை முறைப்படி மாற்றாமல் மனையாக பிரித்ததா? ஓடை இருக்கும் இடமா? குட்டை இருக்கும் இடமா? சாலை தான அதற்கு உண்டான சான்றிதழ்கள் பெற்றதா? பழைய டிடிபி எண்ணை வைத்து தவறாக பதிவு செய்யப்பட்டதா? என்பதைக் கூட கவனிப்பதில்லை என கூறப்படுகிறது. மேலும் ஆய்வுகள் என்பது துளியும் கிடையாதாம். அவர்கள் நீட்டுகிற கோப்பில் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிட்டு நன்றாக கல்லா கட்டுகிறாராம், பெண் சார்பதிவாளர் அருணா என்கிற விவரம் அறிந்தவர்கள். சமீபத்தில் கூட இப்படி சொத்து பத்திர பதிவினை பதிவுச் செய்து கொடுத்த வகையில் ரூ.25 லட்சம் சார்பதிவாளர் அருணாவுக்கு சுளையாக கிடைத்துள்ளதாம். இதுபோன்று அபரிமிதமான தொகைகள் அருணா வசம் செல்வதைப் பார்த்து பக்கத்தில் உள்ள சார்பதிவாளர் வெறும் வேடிக்கை பார்க்க மட்டும்தான் நான் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பல லட்சங்கள்் செலவு வந்தேனா? என தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக மனம் வெதும்பிக் கொண்டிருக்கிறாராம்.. சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் ஆவண காப்பகம் என்று ஒரு அறை உள்ளது. அந்த அறைக்கு முன்வரை சிசிடிவி கேமரா கூட பொருத்தப்பட்டுள்ளது. அதனை பத்திரப்பதிவு ஏஜி-யும், டிஐஜி-யும் கவனிக்கிறார்களா? இல்லையா? அங்கே தான் பெரும்பாலான வரவு- செலவு பேரம் பேசுவது மற்றும் பல பஞ்சாயத்துக்கள் நிகழ்கிறது. இதனை ஏன் மேற்பார்வை செய்ய வேண்டிய சம்பந்தப்பட்ட மேல்மட்ட அதிகாரிகள் கண்டும் காணாதது போல் உள்ளனர் என்பது தெரியவில்லை!?. இதனால் வருவாய் இழப்பு என்னவோ அரசுக்குத் தான் என்பதை அரசு கவனிக்குமா? கோவை மாவட்டத்தில் உள்ள ஊழல் கண்காணிப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் மெத்தனமாக செயல் படுவதால் தான் அரசு அதிகாரிகள் தைரியமாக லஞ்சம் கையூட்டு பெறுவதாக கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இனியும் தாமதிக்காமல் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் இந்த இரு சார் பதிவாளர்கள் மீது ஒரு கண் வைத்து இவர்கள் பெரும் கையூட்டுடன் தட்டி தூக்கி காப்பு மாட்டி வழக்குப் பதிவுச் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- ஆ.இர.விஜயஷங்கர்
- ஆசிரியர் – போர்முனை
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi