போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

14.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது மஜீத்(26) என்பவரை காவல் நத்தம் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.தங்கமுனியசாமி அவர்கள், நீதிமன்ற இரண்டாம் நிலை காவலர் திருமதி.கவிதா அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 14.06.2024-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி முகமது மஜீத் என்பவருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
மேலும் இந்தாண்டு இதுவரைக்கும் 28 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் போர்முனை

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line