தமுமுக மற்றும் மமக மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம் காரைக்காலில் நடந்தது!தமுமுக மற்றும் மமக மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது காரைக்காலில் மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம் தமுமுக மற்றும் மமக தலைவர் M. முஹம்மது மாசிம் தலைமையில் நடைப்பெற்றது. ஆய்வுக்குழு கூட்டத்தை முன்னாள் மமக மாவட்ட துணைச் செயலாளர் ஜீஜா அவர்கள் குர்ஆன் வசனம் ஒதி துவக்கி வைத்தார்கள்.

இந்த மாவட்ட ஆய்வுக்குழு கூட்டத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் தமுமுக மற்றும் மமக செயல்பாடுகள் குறித்தும் , வரவு – செலவு கணக்குகள் மற்றும் ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து நிர்வாக சீர்த்திருத்தம் குறித்தும் , தமுமுக மற்றும் மமக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தற்போது செயல்படுவதை விட வருங்காலங்களில் மேலும் சிறப்பாக செயல்படுவது குறித்தும் சகோதரர் அப்துல் சமது, சகோதரர் தஞ்சை பாதுஷா ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள்இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும் , மமக பொதுச்செயலாளருமான மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ப. அப்துல் சமது ,MLA அவர்களும் , காரைக்கால் மாவட்ட பொறுப்பாளரும், மமக துணைப் பொதுச்செயலாளருமான தஞ்சை பாதுஷா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹிம் , மமக மாவட்ட செயலாளர் அ.ராஜா முஹம்மது, தமுமுக மற்றும் மமக மாவட்ட பொருளாளர் ஹபிப் ரஹ்மான் உள்ளிட்ட மாவட்ட துணைச் செயலாளர்கள் , மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் போர்முனை

More Stories
Türkiyenin En Güvenilir Casino Siteleri Benefit Ve Lisanslı Oyunlar
Das Wichtigste zur Geldverwaltung bei Sportwetten ohne Oasis
Mostbet Bonus Nasıl Çekilir: Hızlı İpuçları ve Püf Noktaları