நத்தம்,ஜூன்.14:
நத்தம் அருகே ஏரமநாயக்கன்பட்டியில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது லாரி மோதி வெள்ளிக்கிழமை இரவு அதிகாலை விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் -பரமக்குடியில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூருக்கு நோக்கி லாரியில் பஞ்சு ஏற்றிக்கொண்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த பூசத்துரை (வயது 48) ஓட்டி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள ஏரமநாயக்கன்பட்டி
வழியாக லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியின் முன் பகுதி தடுப்பு சுவர் மீது ஏறி நின்றது.இதில் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் பூசத்துரை சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார் திடீரென லாரி மோதியதில் ஏற்பட்ட பலமான சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இவ்விபத்து குறித்து நத்தம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் போர்முனை
.

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line