November 22, 2024

பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா

பண்ருட்டி. ஜுன்.15.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் புறங்கணி மதுரா சின்னபுறங்கணி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பச்சை வாழியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவதற்கு வழக்கம். 20 ஆம் ஆண்டு திருவிழா ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி விழா அம்மன் வீதி உலா, மயில் வாகனத்தில் வீதியுலா, முத்து வாகன வீதியுலா, சந்திர பிரபா வீதியுலா, தெருவடைச்சான் வீதியுலா, ரத உற்சவம் வீதியுலா, திருக்கல்யாணம் என தினமும் ஒரு விழா என வண்ண விளக்கு அலங்காரத்தில் கிராமமே விழா கோலம் பூண்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா சேரா வகையரா ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குழந்தைகள் தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக பச்சைவாழிஅம்மன், காவல் புரியும் அக்னிவீரன், வாழ்முனி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்