
காரைக்காலில் கொலை செய்யப்பட்ட சிறுவன் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி – புதுவை முதல்வர் ரெங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் சில தினங்களுக்கு முன்பு திருப்பட்டினத்தைச் சேர்ந்த சிங்காரவேலு சுதா தம்பதியினரின் மகன் சந்தோஷ் எனும் 13 வயது சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் இன்னொரு 19 வயதுடைய நபரின் சக நண்பனால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டான்.. மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இச்சம்பவத்திற்கு பிறகு மகனை இழந்த சிங்காரவேலு – சுதா தம்பதியினர் புதுச்சேரி மாநில அமைச்சர் P.R.N. திருமுருகனை சந்தித்து வறுமை நிலையில் உள்ள தங்களது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்..
பரிதாபகரமான அந்த குடும்பத்தினரின் நிலையை பார்த்த அரிந்த அமைச்சர் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு புதுச்சேரி சட்டசபை அலுவலகத்திலிருந்த அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்களை பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து அவர்களது பரிதாப நிலையை எடுத்து சொன்னார், அவர்களுக்கு நிதியுதவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அமைச்சரின் பரிந்துரையை பரிவுடன் கேட்டுக்கொண்ட முதல்வர் அவரது பரிந்துரையை ஏற்று உடனே அந்த சிறுவனை இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.
இவ்வறிவிப்பால் நெகிழ்ந்து போன சிங்காரவேலு – சுதா தம்பதியினர் தங்களை முதலமைச்சரிடம் அழைத்து வந்து பரிந்துரைத்த அமைச்சர் திருமுருகனுக்கும், பரிந்துரையை உடனே பரிசீலித்து ஏற்றுக் கொண்டு நிதியுதவியை அறிவித்த முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் - போர்முனை

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line