
புதுச்சேரியில் ஹஜ் புனித யாத்திரை பயணிகளுக்கு மானியம் – முதலமைச்சர் ரெங்கசாமி அறிவிப்பு!
ஹஜ் கமிட்டி நிர்வாகிகள் நன்றி தெரிவிப்பு!
புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி மூலம் புனித யாத்திரையான ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கிட கமிட்டி தலைவர் ஒய்.இஸ்மாயில் தலைமையில் முதல்வர் ரெங்கசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த சந்திப்பிலேயே கமிட்டி தலைவர் ஒய்.இஸ்மாயிலிடம் முதல்வர் ரெங்கசாமி ஹஜ் யாத்திரை பயணம் மானியம் விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளிருந்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களிடம். புதுச்சேரி ஹஜ் கமிட்டி தலைவர் ஒய். இஸ்மாயில் வைத்த கோரிக்கையை ஏற்று உறுதியளித்தபடி புதுச்சேரி ,காரைக்கால் மாஹி ஆகிய பகுதிகளைச் சார்ந்த மொத்தம் 78 நபர்களுக்கு தலா 16,000 வீதம் மொத்தம் 12,48,000 ரூபாய் ஹஜ் பயணம் புனித யாத்திரை மானிய தொகையை விடுவித்ததுள்ளார்.
தற்போது ஹஜ் பயணம் சென்றுள்ளவர்கள் திரும்பி வந்தவுடன் மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் மானிய தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட இருப்பதாக ஹஜ் கமிட்டி தலைவர் ஒய்.இஸ்மாயில் தெரிவித்தார். தொடர்ந்து தனது சார்பாகவும், ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் சார்பாகவும் தங்களது கோரிக்கையை ஏற்று ஹஜ் மானியத்தை விடுவித்த மாண்புமிகு முதலமைச்சர் ரெங்கசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார் .
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் - போர்முனை

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line