November 21, 2024

சர்வதேச குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில்.. 13 மாணவர்களுக்கு 2 லட்சத்தி 70 ஆயிரத்து 500/- DD-யை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

சர்வதேச குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில்.. 13 மாணவர்களுக்கு 2 லட்சத்தி 70 ஆயிரத்து 500/- DD-யை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
சர்வதேச குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த உயர்கல்வி பயில்வதற்கு 13 மாணவர்களுக்கு 2 லட்சத்தி 70 ஆயிரத்து 500/- DD-யை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் வேலூர் மாவட்டத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தை பராமரிப்பு மூலம் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 12.06.2024 அன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி கே.வி. குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட வே.இரா.சுப்புலட்சுமி., இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் . நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இதில் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிஞ்சைமந்தை மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த உயர்கல்வி பயிலும் 13 மாணவர்களுக்கு தலா 22,500 என மொத்தம் இரண்டு லட்சத்தி 70 ஆயிரத்து 500 ரூபாய்க்கான (வரையோலைகள் DD) ஆனது மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார். அது மட்டுமல்லாது அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்கள் கொண்ட தகவல் பலகை வெளியீடு 3 விழிப்புணர்வு பலகை ஐசி வெளியீடுகள் ஆகிய மூன்று நிகழ்வும் நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ,தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கலியமூர்த்தி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி‌, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுபாஷினி, கே.வி.குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் மற்றும் ஜான் சுகுமார், முதன்மை மேலாளர் தவேலாயுதம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகப்பன் வெங்கடேசன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்துக் கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை
நோக்கம் உயர்கல்வியை ஊக்குவித்தல் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்தல் நமது கடமைகளை நிறைவேற்றுவோம் குழந்தை தொழிலாளர் முறையில் ஒழிப்போம் என்பதைப் பற்றிய நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இறுதியில் முதல் நிலை ஒன்றியம் மேலாளர் மகாலட்சுமி நன்றி கூறினார். இதில் மாணவ மாணவிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.