January 15, 2026

வரிஞ்சிப்பாக்கத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

பண்ருட்டி.ஜுன்.17. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 9 ம் தேதி மிதுன லக்னத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜைகள், சித்தி விநாயகர் பிம்ப சுத்தி ரக்ஷாபந்தனம், நாடி சந்தனம், தத்துவார்ச்சனை, ஸ்பர்ஸாஹூதி, திரவியாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம் பல்வேறு வகையான பூஜைகள் நடைபெற்று யாகசாலையில் இருந்து கடம் புறப்படாகி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சித்தி விநாயகருக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. வரிஞ்சிபாக்கம் கிராம முக்கிய பிரமுகர்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.