
பண்ருட்டி. ஜீன். 19. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில்
உணவு பாதுகாப்பு துறை சார்பில் திருமண மண்டப உரிமையாளருக்கான உணவு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பி.கே.கைலாஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. திருமண மண்டபம் உரிமையாளர் சங்க துணை தலைவர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார். சுப்ரமணியன், உணவு பாதுகாப்பு அலுவலர், பண்ருட்டி நகராட்சி மற்றும் வட்டாரம் பெ.நல்லதம்பி, உணவு பாதுகாப்பு அலுவலர், புவனகிரி மற்றும் கம்மாபுரம் வட்டாரம் அவர்கள் திருமண மண்டப விதிமுறைகள் மற்றும் பயன்கள் பற்றி எடுத்துரைத்தார்கள்.

திருமண மண்டப உரிமையாளர்கள், சமையல் கலைஞர்கள், அவர் உடன் சார்ந்த ஊழியர்கள் மண்டபத்தின் உள்ளே சமையல் வேலைக்கு அனுமதிக்கும் முன் திருமண மண்டப உரிமையாளர்கள்/ மேலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்கள்.
உரிமம் எப்படி எடுக்க வேண்டும் எனவும் விளக்கினார்கள். விஜயரங்கன் அவர்கள் கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும், அவசியம் பற்றியும் கூட்டத்தில் விளக்கினார். மண்டப உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் V.V. மஹால் உரிமையாளர் சுப்ரமணியன் அவர்கள் நன்றி கூறினார்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi