
கந்தர்வகோட்டை ஜூன் 22.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வீரடிப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக இசை தினம், உலக மனிதநேய தினம், உலக மலைக்காடுகள் தினம் உள்ளிட்ட முப்பெரு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அறிவியல் இயக்க கிளைத் தலைவர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டார செயலாளர் ரகமதுல்லா பேசியதாவது
உலக மழைக்காடுகள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது, உலக மழைக்காடு தினம் என்பது மழைக்காடுகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய அனுசரிப்பு ஆகும். உலகளாவிய பல்லுயிரியலைப் பராமரிப்பதிலும், காலநிலை மாற்றத்தைத் தணிப்பதிலும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதிலும் மழைக்காடுகள் வகிக்கும் முக்கிய பங்கைப் பற்றி சிந்திக்க இது ஒரு வாய்ப்பாகும் .
2024 ஆம் ஆண்டின் உலக மழைக்காடு தினத்தின் கருப்பொருள் எங்கள் மழைக்காடுகளைப் பாதுகாப்பதில் உலகை மேம்படுத்துதல் என்பதாகும்.
உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 120 நாடுகளில், உலக இசை தினம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்வுகள் மூலம் கொண்டாடப்படுகிறது.
உலக மனிதநேய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் சாராம்சம் மனிதநேயம் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் பரப்புவதாகும். மனிதநேயம் மனிதர்களின் மதிப்பில் கவனம் செலுத்துகிறது என்று பேசினார். இந்நிகழ்வில் அறிவியல் இயக்க உறுப்பினர்கள் ரமீலா, பரிமலேஸ்வரி,விஜி,பிரதீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?