
சட்டசபையில் 22.06.2024 இன்று கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் பேசுவது கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் ஆனி மாத ஆனி மாத தேரோட்டத்தின் போது தேர் இழுக்கும் கயிறு சரி இல்லை என பொதுமக்களாலும் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் வாயிலாக கேட்டுக் கொண்டதுக்கிணங்க இரும்பு சங்கிலிகள் கொண்டு இழுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

அப்போது பதில் அளித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆசியாவில் இருக்கின்ற மிகப்பெரிய தேர்கலிலேயே மூன்றாவது தேர் நெல்லையப்பர் கோவில் தேர் எனவும் 28 க்கு 28 அகலம் நீளம் கொண்ட 80 அடி உயரம் கொண்ட இந்த தேரானது கடந்த ஒன்பது நாள் உற்சவத்தில் இறுதி நாளான 21.06.2024 அன்று தேர் வடம் பிடித்து இழுக்கின்ற நிகழ்ச்சியானது நடைபெற்றது.
தேரின் வடத்தை பின்னால் இருந்து நெம்புகோல் கொண்டு தள்ளுவதற்கு முன்பாக பக்தர்கள் பக்தி பரவசத்தோடு ஒட்டுமொத்தமாக இழுத்ததின் காரணமாக தேர் வடமானது அறுந்துவிட்டது.

அதற்கு மாற்றாக திருச்செந்தூர் தேரின் வடமானது தயாராக வைக்கப்பட்டு இருந்தது உடனடியாக அந்த தேர் வடத்தை இணைத்து வெற்றிகரமாக தேரோட்டம் நடைபெற்றது பொதுவாக எல்லா தேர்களிலும் இணைப்பு பகுதி இரும்பு சங்கிலியால் அமைக்கப்பட்டிருக்கும் அதை நீளமாக கயிற்றால் பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள் பொதுவாக இந்த நெல்லையப்பர் கோவில் தேர்னது 450 டன்கள் எடை கொண்ட தேர் அந்த தேரை இழுப்பதற்கு நீளமாக கயிற்றால் ஆன வடம் இருக்கும் பெரும்பாலான தேர்கள் அதிக எடை கொண்டு இருப்பதால் வடம் கயிற்றினால் நீளமாக இருக்க வேண்டும் தேரோட்டத்திற்கு முன்பாக பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகள் சான்று அளித்ததின் பெயரில் தான் தேர் வளம் வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருந்தும் தேரின் கயிறானது அறுபட்டது.எனவே அறுபட்ட வடத்தை வரும் நிதியாண்டில் இரும்பு சங்கிலியால் உருவாக்கப்பட்ட வடம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டதின் பேரில் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.

துணை சபாநாயகர் கூறிய நெல்லையப்பர் கோயில் வடம் இரும்பு சங்கிலியால் அமைத்து தரப்படும் என்றும் சோமாஸ்பாடி மாரியம்மன் கோவிலும் இந்த நிதியாண்டிலேயே புனரமைத்து தரப்படும் என்று அறிவித்தார்.
கே.எஸ்.சரவணன்
செய்தியாளர் போர்முனை
திருவண்ணாமலை
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi