November 17, 2024

கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கடலூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கடலூர். ஜுன்.24. தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜுன் 24ந் தேதி கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்த நிலையில் அதன் ஒரு பகுதியாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தலைமையில் நடைபெற்றது.


அமைப்பு செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் , மு.சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த வாரம் 60 க்கும் மேற்பட்டோர் கள்ள சாராயம் குடித்த இறந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க தவறிய
தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் பேசியதாவது:
தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போதைப் பொருள்கள் தலை விரித்து ஆடுகிறது. அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. காவல்துறை கள்ளச்சாராயம் கஞ்சா உள்ளிட்ட மது விற்பனையை காவல்துறை மூலம் கட்டுப்படுத்த வேண்டும். இந்த ஆட்சி தூக்கி எறிய வேண்டிய ஆட்சி என பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் காவல்துறை அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் குற்றம் செய்பவர்களுக்கு காவல் துறை துணை போகக் கூடாது. மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு விசாரணைக்கு தனி நீதிபதி அமர்வு தேவையில்லை . சிபிஐ விசாரணை தான் வேண்டும் என தெரிவித்தார். எதிர்வரும் 2026 இல் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் எடப்பாடியார் பொற்கால ஆட்சி மலரும். அதற்கு நீங்கள் ஆதரிக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. தாமோதரன், செல்வி. ராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியம், சத்யா பன்னீர் செல்வம், மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், கடலூர் நிர்வாகிகள் காசிநாதன், தெய்வ பக்கிரி, செல்வ அழகானந்தம், மாதவன், பாலகிருஷ்ணன், வெங்கட் ராமன், கந்தன், தங்க வினோத் ராஜ், கெளரி பாண்டியன், மணிமேகலை, ஜெயச்சந்திரன், அண்ணா கிராம ஒன்றியக் செயலாளர்கள் நாகபுஷ்ணம், ராமசாமி, தமிழ் செல்வன், பண்ருட்டி நகர செயலாளர் தாடி முருகன், அவைத்தலைவர் ராஜதுரை, துணை செயலாளர் மோகன்,
நெல்லிக்குப்பம் நகர செயலாளர் காசிநாதன், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் சிவா, மாவட்ட அம்மா பேரவை கனகராஜ், மேல்பட்டாம்பாக்கம் பேரூர் செயலாளர் அர்ச்சுனன் மற்றும் மாநகர, மாவட்ட, ஒன்றிய,நகர பேரூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

முருகானந்தம் 
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்