
பண்ருட்டி. ஜுன்.25. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பேருந்து நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
சிமோன்ராஜ் ஆறுமுகம், தணிகாசலம், சசிகுமார், மகாலிங்கம், வெங்கடேசன், ராமசாமி, கணேசன், வள்ளி ஆகியோர்
முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட செயலாளர் துரை கண்டன உரையாற்றினார். கள்ளக்குறிச்சி அடுத்த கர்ணாபுரம் கிராமத்தில் கடந்த வாரம் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கு, கள்ளச்சார விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து அவர்களை
நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்கிடு. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா அபின் போதை வாஸ்த்துக்கள் ஏராளமான விற்பனை கண்டு கொள்ளாத காவல்துறையை கண்டித்து, கள்ள சாராயம் விற்பனை செய்யும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடு. உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு நிதியாக 50 லட்சம் வழங்கிடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினார். மாவட்ட நிர்வாக குழு பாஸ்கர், சக்திவேல், பன்னீர்செல்வம், சிவகுமார், வடக்கு ஓன்றிய செயலாளர் ஞானசேகர், மாவட்ட குழு குணசேகர், மணிவண்ணன், லாரன்ஸ், லட்சுமி, ஆறுமுகம், தனபால், லட்சுமி மற்றும் கிளை செயலாளர்கள் ஸ்ரீதர், சீனுவாசன், அண்ணாதுரை, ராமலிங்கம், அபினேஷ், வேல்முருகன், ஆறுமுகம், காசிநாதன், துளசி, ஸ்டெல்லா ராஜீவ்காந்தி மற்றும் ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line