October 6, 2025

அருத்ததியர் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச பட்டா தர மறுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா தர மறுபதாகவும் ஒரு வருட காலமாக மக்களை அலைக்கழிபதாகவும் சாத்தனூர் கிராமத்தில் GLR திட்டத்தின் மூலம் 46 பயனர்களுக்கு பட்டா ஆய்வு செய்யப்பட்டது என கூறப்படுகிறது

இதில் அருந்ததியர் மற்றும் ஆதி திராவிடர்மக்களுக்கு 24 வீடுகளுக்கு மட்டும் தரப்பட்டதாகவும் மீதமுள்ள 22 வீட்டுக்கு பட்டா வழங்கவில்லை எனவும் அரசு மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியிலும் முறையாக மனு அளித்துள்ளதாகவும் இலவச பட்டா வழங்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் பண்ண போவதாகவும் தெரிவித்தனர்

இந்நிகழ்ச்சியில் அருந்ததி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ் கே கருணாமூர்த்தி ஏழுமலை ஜெயபிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.