November 23, 2024

போதைப்பொருள் பயன்பாடு எதிராக மனித சங்கிலி

.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினம் இன்று திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சாய்ராம் மெட்ரிக்குலேஷன் பள்ளி வரை மனித சங்கிலியாக மாணவர்கள் நின்று போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பதாதைகள் கையில் ஏந்தி அனுசரிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வை விஷ்வ யுவ கேந்திரா – நியூ டெல்லி, குளோபல் இனிசியேட்டிவ்ஸ் மது தடுப்பு – ஸ்பெயின், சி -ஹாய் சென்னை மற்றும் வெங்கடேஸ்வரா கல்வி மற்றும் கிராம வளர்ச்சி அறக்கட்டளை – திருவாரூர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிரிலியன்ட் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி, தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி ,சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிரைட் பீப்பிள் பவுண்டேஷன் நர்சிங் கல்லூரி , வி ஜ எ கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல்,பாரதமாதா தொண்டு நிறுவனம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கருத்தரங்க நிகழ்வாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் மனித சங்கிலியை தொடங்கி வைத்து,போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார் மேலும் போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியை காவல் கண்காணிப்பாளர் கூற எல்லாரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் காரல் மார்க்ஸ் , திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார், வெங்கடேஸ்வரா அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கர், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் முனைவர் துரை ராயப்பன் , பிரிலியன்ட் கல்வியில் கல்லூரி நிர்வாக அதிகாரி அப்துல் முத்தலீப், அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வின்சென்ட் ஆரோக்கியராஜ், பாரதமாதா எடையூர் மணிமாறன், திருவாரூர் டேங்க் சிட்டி ரோட்டரி சங்க வருங்கால தலைவர் ரவி ,தண்டலைச்சேரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் மாறன், பேராசிரியர் பன்னீர் செல்வம் மற்றும் அக்கல்லூரி உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், காவல் ஆய்வாளர் மாரிமுத்து, மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் கார்த்திகா, உதவி ஆய்வாளர் முத்துகுமார் ஆகியோர் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியை வழி நடத்தியதோடு மட்டுமில்லாமல் நிகழ்ச்சி வெற்றி பெற செய்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதற்குப் பிறகு பிரிலியன்ட் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கமும், விவாதமும் மாணவர்களிடையே கலை நிகழ்ச்சி மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக வெங்கடேஸ்வரா கல்வி மற்றும் கிராம வளர்ச்சி அறக்கட்டளை மாவட்ட வள அலுவலர் கதிரேசன் நன்றி கூறினார்.