கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 21 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர்,
இதில் திமுக 7 கவுன்சிலர்கள்,அதிமுக 7 கவுன்சிலர்கள் 5 சுயேச்சை கவுன்சிலர்கள் 2 பாமக கவுன்சிலர்கள்,உள்ள நிலையில்
இதில் வரம்பனூர்,தே.புடையூர்,கோ கொத்தனூர்,திருப்பெயர் ஆகிய கிராமங்கள் அடங்கிய ஏழாவது வார்டு கவுன்சிலரான வ.க.சிவகுமார் என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்,
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து தங்களது கிராமத்திற்கு எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுவதில்லை எனவும்,
இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்,இது சம்பந்தமாக கடந்த 21.6.2024
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்பிராஜிடம் மனு அளிக்கப்பட்டது,
இந்த நிலையில் இன்று மாதாந்திர கூட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது,
இக்கூட்டத்தில் ஏழாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தங்கள் கிராமத்துக்கு ஊராட்சி ஒன்றிய நிதியில் ஒரு பைசா கூட வரவில்லை எனக் கூறி நெத்தியில் நாமம் போட்டு கையில் பானை எடுத்து வந்தும் கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்,
மேலும் நல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் அவர்களிடம் ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் தங்கள் பகுதியில் நிதி ஒதுக்கவில்லை என கூறி கையில் இருந்த காலி பானையை கொடுத்து நிதி கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் -போர்முனை
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.